1. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.
விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.
2. அடியாத மாடு படியாது.
விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.
3. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.
4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு
விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கௌரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.
6. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.
7. பசி வந்திட பத்தும் பறந்து போகும்
விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.
8. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.
9. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
விளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.
10. சேலை கட்டிய மாதரை நம்பாதே
விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.
11. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.
12. ஆமை புகுந்த வீடு உருப்படாது??
கல்லாமை, உண்மை பேசாமை, பெரியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு
செலுத்தாமை போன்ற ஆமைகள் புகுந்தால் அந்த வீடு முன்னேறுவதற்கு வாய்ப்பே இல்லாமல்
போய்விடும்.எனவே, இந்த இல்லாமைகள் அகற்றி வாழ்க்கையில் இன்புற வேண்டும்
ஒரு சிறிய ஆய்வு:
ஆமையின் அதிகப்பட்ச வேகம் நிமிடத்திற்கு 14 அடி தூரமாகும்.இந்த
வேகத்தில் வரும் ஆமை வீட்டின் சுற்றுச் சுவரின் முகப்புவாயிலின் வழியே முற்றம் கடந்து,திண்ணை
தாண்டி, படியில் ஏறி, வாசலுக்குள் நுழைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை யூகித்துகொள்ளுங்கள்.
அவ்வளவு நேரம் ஒரு வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமலும்,வீட்டில் உள்ளவர்கள் சோம்பலோடும்,வாசல்
கதவு திறந்தும் கிடந்தால் அந்தவீடு சிறக்க எந்த வகையிலாவது வாய்ப்பு உண்டா.
தெரிந்துகொள்வோம் ..:
-------------------------------------------
1. கண்ணாடியால் சாலைகள் போட்ட முதல் நாடு ஜெர்மனி.
2. ஆண்களுக்கான சட்டையைக் கண்டுபிடித்த நாடு எகிப்து.
3. இரண்டு செட் உடைகள் மட்டுமே பிடிக்கும் ஜேம்ஸ்பாண்ட் பாணி சூட்கேஸ்கள் முதன்முதலில் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டன.
4. மாரடைப்பால் நின்றுபோன இதயத்தை மீண்டும் இயக்க உதவும் கருவியின் பெயர் மார்க்விட் ரெஸ்பாண்டர் 1200.
5.இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள "திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.
6. பூனைகளை வளர்ப்பது அதிர்ஷ்டமானது என்று கருதுபவர்கள் ஐஸ்லாந்து மக்கள்.
7. உலகில் ஐம்பது சதவீதத்திற்கும்மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.
8. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.
9.ஒரு கிலோவில் சுமார் 2000 ரப்பர் பேண்டுகள் இருக்கும்.
10. ரோஜாக்களிலிருந்து பன்னீர் எடுத்து அதைப் பிரபலமாக்கிய பெண்மணி, முகலாய அரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான்.
தலைவர்கள் சொன்னது:-
------------------------------------
நேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில் அடைந்து விட முடியாது - கதே
நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும் – காந்திஜி
பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது! - நேதாஜி
சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது! -ஏங்கல்ஸ்
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
மனத் திருப்தி, நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம்; ஆடம்பரம், நாம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட பஞ்சம் – சாக்ரடீஸ்
கட்சி மாறுகிறவன் அயோக்கியன், அயோக்கியன், மகா அயோக்கியன்! -பெரியார்.
"குட்டிக்கதைகள் "
--------------------------------
1. எது சொர்க்கம்...?
ஒரு முறை சிவனும் பார்வதியும் வானத்தில் உலா வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு குளக்கரையில் ஒரு கொக்கு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.
உடனே பார்வதி சிவனிடம், ''இந்தக் கொக்கு ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது?'' என்று கேட்டார்.
சிவன், ''கொக்கே,உனக்கு என்ன வேண்டும்?சொர்க்கத்திற்கு வருகிறாயா?'' என்று கொக்கிடம் கேட்டார்.
'சொர்க்கத்தில் அயிரை மீன் கிடைக்குமா?' என்று கேட்டது கொக்கு.கிடைக்காது என்றார் சிவன்.'
அப்போ,சொர்க்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
எங்கே அயிரை மீன் கிடைக்கிறதோ, அதுவே எனக்கு சொர்க்கம்.' என்றது கொக்கு.
எங்கே நமக்கு நிம்மதி கிடைக்கிறதோ, அதுவே நமக்கு சொர்க்கம்.
2. புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள்.
அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து
காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதை பார்த்த மனைவி கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா.
ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.
பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு.
திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா.
அதுக்கு அந்த கணவன்’அது வேற ஒன்னும் இல்ல.
இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.
இதனால் நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னானா: அடுத்தவனோட குறைகளா நாம நெனைக்கிறது சில நேரங்களில் நம்மளோட பார்வை பிரச்சினையா கூட இருக்கலாம்.
படித்து பாருங்கள்:-
--------------------------
1. பணக்காரனாக மாறிவிட்டான் பாகன், இன்னும் பிச்சை எடுகிறது யானை.
2. ஆணி குத்திய காலுடன் செருப்பு தைக்கும் சிறுவன்.
3. அழைத்த குரலுக்கு ஒடிவர ஆள் இல்லை, நெடுச்சாலை வாகன விபத்தில், உயிருக்கு போராடி கொண்டு இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்.
4. எரிவாயீவு விலை ஏற்றத்தை கண்டித்து கட்சியினர் எரித்துவிட்டனர், ஏழைகளின் குடிசைகளை.
5. குங்குமம் வார இதழை விரும்பி படிக்கும் வாசுகி இன்று விதவையானாள்.
6. பட்டினி சாவை எதிர்த்து, இன்று ஊர் மக்கள் உண்ணாவரதம்.
7. அதிக வலி எடுக்கும் போது அம்மா என்று கதற விடுகிறது அனாதை குழந்தைகள்.
8. அரசியல்வாதிகள் செய்த லஞ்ச ஊழலை மறைக்க லஞ்சம் வாங்கினார், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி.
9. ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும் முத்தான் ஒரு குழந்தைகளும் இல்லை, முதியோர் இல்லத்தில்.
அறிந்துகொள்ளுங்கள்...!
----------------------------------------------------------------
* கணடங்களில் பெரியது ஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.
* மலைகளில் பெரியது இமயமலை.
* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.
* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப்படுவது தாய்லாந்து.
* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள் வெள்ளி.
* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
*அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
* இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.
* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.
* ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.
* இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.
* பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.
* செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.
* எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.
பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மனைகள் :-
----------------------------------------------------------------------------------------------------
1. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
2. திருச்சி மங்கம்மாள் அரண்மனை
3. தஞ்சாவூர் சரபோஜி அரண்மனை
4. புதுக்கோட்டை அரண்மனை
5. சென்னை சேப்பாக்கம் அரண்மனை
6. சிவகங்கை அரண்மனை
7. எட்டயபுரம் அரண்மனை8. இராமநாதபுரம் அரண்மனை
9. பத்மனாபுரம் அரண்மனை
10. மதுரை அரசி மங்கம்மாள் அரண்மனை
பொது அறிவு:-
-----------------------
* ராக்கெட்டினை முதலில் கண்டறிந்தவர் சீனர்கள். இது 13ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.
* நமது உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் 4 1/2 லிட்டர் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. மீதி 1 1/2 லிட்டர் ரத்தத்தை சேமிப்பாக உடல் வைத்துள்ளது.
* செவ்வாய் கிரகத்தில் ஒருநாள் என்பது 24 1/2 மணி நேரம். கோடை நண்பகலில் கூட இங்கு 16டிகிரி c நிலை இருக்கும். குளிர்கால இரவிலோ 85டிகிரி c வந்து விடும்.
* 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆமைகள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவை மெதுவாகச் செல்லக் கூடியவை. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. தாவர வகை உணவைச் சாப்பிடுவதில்லை.
300 ஆண்டுகளுக்கு மேல் ஆமைகள் உயிர் வாழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
* தென் அமேரிக்கா பறவைகளின் கண்டம் என அழைக்கப்படுகிறது.
* இந்தியாவில் மிகப் பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
* இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
* உலகிலேயே மிகப் பெரிய வெந்நீர் ஏரி நியூசிலாந்து நாட்டில் உள்ளது.
* ஆஸ்திரேலியா நாட்டிற்கு இரு தேசியகீதங்கள் உள்ளன.
* இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் ரெட்கிளிப் எனப்படுகிறது.
* தொழில்புரட்சி முதன் முதலில் நடந்த நாடு இங்கிலாந்து.
* பிரிட்டனின் தேசிய மலர் ரோஜா.
* இந்தியாவின் தேசிய விலங்கு புலி.
* சம்பா நடனத்திற்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.
* சோவியத் ரஷ்ய ராணுவத்தின் பெயர் ரெட் ஆர்மி.
* சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.
* 1905 - சுஸான்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.
* 1916 - தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? 5 பேர் தான்.
* 1927 - அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.
* 1959 - அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதிவியேற்றார்.
* 1966 - கேப்டன் துர்கா பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய 'மகசேசே' விருதைப் பெற்றார். இந்தியாவின் முத்ல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.
* 1970 - ஆசிய விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.
* 1972 - இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண் பேடி காவல் துறையில் பதவியேற்றார்.
* 1989 - முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக எம். பாத்திமா பீவி பதிவியேற்றார்.
* 1997 - கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சாதனைக்குச் சொந்தக்காரர்.
* 2005 - பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.
* 2007 - இந்தியாவின் முத்ல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.
* நாம் உபயோகப்படுத்தும் 'டை' 3300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
* இந்தியாவில் மே தினத்தை 1927 -ம் ஆண்டுலிருந்து கொண்டாடப்படுகிறது.
* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
* பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் ரோமானியர்கள்..
தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கையின் 33 குறிப்புக்கள் :-
----------------------------------------------------------------------------------
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்...!
---------------------------------------------------------------------------
1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.
3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.
4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.
6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.
7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே
8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/
9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471
10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241
சின்ன கருத்து:-
------------------------
மரம் வைப்பவனுக்கு கூலி இல்லை ,
வெட்டுபவனுக்கே கூலி .. !!
வைப்பவனுக்கும் கூலி என்று சொல்லிப் பாருங்கள்,
உலகம் பசுமையாய் இருக்கும்.
உலகம் புகழும் பொன்மொழிகள்:-
-----------------------------------------------------------
1)படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
2) மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
3) உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
4) வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
5) பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.
6) ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
7) எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
8) மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
9) கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
10) அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
வறுமை :-
-----------------
காசு கேட்க
கதவை தொட்டேன்
கண்ணாடி
இறக்காமல் கண்ணால்
விரட்டினார்
கழுவி விட்டால்
அழுக்கு
கரைந்து போய்விடும்
கரையுமா
வறுமை பூசிய
கறை
யார் விரட்ட
பறந்தோடும் என் பசி?
No comments:
Post a Comment